இதுவரையில் கமல்ஹாசன் முத்தம் கொடுத்த நடிகைகள்.. எத்தனை பேர காவு வாங்கிருக்கார் பாருங்க
முத்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்றால் அது நடிகர் கமலஹாசன் தான். சமீபத்தில் கூட பழைய நடிகை ஒருவர் கமலஹாசன் தன்னை கேட்காமலேயே தனக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து விட்டார் என சர்ச்சையைக் கிளப்பினார்.
ஹாலிவுட் பாணியில் படம் எடுப்பது கமல்ஹாசனுக்கு பிடித்த ஒன்று. ஆக்சன் மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் ஆங்கில நடிகர்களை பின்பற்றி வளச்சு வளச்சு பல நடிகைகளுக்கு கிஸ் அடித்து உள்ளார்.
ராணி முகர்ஜி: ஹேராம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தவர்தான் பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி. இந்த படத்தில் வரும் ரொமான்ஸ் பாடலில் ராணி முகர்ஜிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்திருப்பார் நமது கமலஹாசன்.
கௌதமி:
திருமணம் ஆகாமலே கமலஹாசனுடன் குடித்தனம் நடத்தியவர் தான் நம்ம கௌதமி. அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது குருதிப்புனல் படத்தின் போதுதான். அந்த படத்தில் காட்சிக்கு காட்சி கௌதமிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து ரசிகர்களை நெளிய வைத்திருப்பார் கமலஹாசன்.
ஆண்ட்ரியா:
சமீபகாலமாக ஆண்ட்ரியா இல்லாத லிப் கிஸ் காட்சிகளா என ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அவருடன் ஜோடி போடும் அனைத்து நடிகர்களும் ஆண்ட்ரியா உதட்டின் மீது குறியாக இருக்கிறார்கள். கமல்ஹாசனுக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா என்ன, உத்தம வில்லன் படத்தில் அதை நிறைவேற்றிக் கொண்டார்.
ரேகா:
கமலஹாசன் முத்தம் கொடுத்ததற்கு பெரிய சர்ச்சையைக் கிளப்பியவர் தான் இந்த நடிகை ரேகா. ரேகாவை கேட்காமலேயே கமல்ஹாசன் உதட்டை கடித்து விட்டதாக கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து கம்ப்ளைன்ட் செய்துள்ளார்.
சுகன்யா
மகாநதி படத்தில் ஒரு சீனில் அவசர தேவைக்காக நடிகை சுகன்யாவை உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து காட்சிகளை வைத்திருப்பார் நமது கமலஹாசன்.
பூஜா குமார்:
கமலஹாசனின் சமீபகால வரவு. கமல்ஹாசனுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருக்கு தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுப்பார். அப்படி விஸ்வரூபம் படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் எடுத்தவர்தான் பூஜாகுமார்.
இன்னும் லிஸ்டில் விட்டுப்போன விருமாண்டி அபிராமி, தூங்காவனம் மதுஷாலினி, ஆளவந்தான் ரவீணா டாண்டன் மற்றும் பலர் கமல்ஹாசன் படங்களில் முத்த காட்சிகளில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை