நவக்கிரிவாழ் மக்களுக்கும் தமிழ் சி.என்.என். நிவாரணம்!
கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.
சுயதொழில் இழந்த மக்களுக்கு ஆதரவுக் கரங் கொடுப்பதற்காக தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி தமிழ் சி.என்.என். ஊடாக பல்வேறு பட்ட நிவாரண உதவிகளையும், அநாதரவாக அந்தரித்து ஒருவேளை உணவுக்காக ஏங்குபவர்களுகளுக்கும் யாசகம் செய்பவர்களுக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, கைதடி போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் உள்ள பராமரிப்பாளர்கள் ஆகியோருக்கு மதிய உணவு வழங்கல் போன்ற சமூகசெயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்.
அதன் ஓர் அங்கமாக நவக்கிரி பகுதியிலும் தமிழ் சி.என்.என். இன் நிவாரணப் பணி நடைபெற்றது. இந்த நிவாரணப் பணிக்கு ராம்ஜி சுந்தரேஸ்வரன் என்ற கருணை உள்ளங்கொண்ட அன்பர் அனுசரணை வழங்கியுள்ளனர்.
நவக்கிரி புத்தூர் கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த லோஜன், புவிராஜ், வினுசன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை