மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கை பிரஜைகள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கை மற்றும் ஜப்பான் பிரஜைகள் 304 பேர் இலங்கையை வந்தடைந்தனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் – 102 என்ற விசேட விமானம் மூலமாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்தனர்.

அவர்களில் 288 பேர் இலங்கைப் பிரஜைகள் என்பதுடன், 16 பேர் ஜப்பானியர்கள் ஆவர். குறித்த 16 ஜப்பானியர்களும் இன்று மாலை தமது சொந்த நாட்டிற்கு புறப்படவுள்ளனர்.

இலங்கையை வந்தடைந்த பயணிகளை இலங்கை விமானப்படை ஊழியர்கள், விமான நிலைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கிருமி நீக்கம் செய்தனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளையும் சோதனை செய்ததுடன், இலங்கை பயணிகளை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு இராணுவத்தினர் பேருந்துகள் மூலமாக அழைத்துச் சென்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.