இலங்கையில் மேலும் 32 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டனர்
இலங்கையில் மேலும் 32 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் மொத்தமாக 477 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 925 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 439 பேர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றினால் 9 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை