இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1136 மில்லியனாக அதிகரிப்பு
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1136 மில்லியனாக அதிகரித்துள்ளது.
Canowin Hotel @ SPAS (Pvt) Ltd நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளதுடன், அதற்கான காசோலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
Mascons (Pvt) Ltd நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவையும், Built Element Ltd நிறுவனம் மூன்று மில்லியன் ரூபாவையும், திரு. சிறில் சமரஜீவ 250,000 ரூபாவையும், Exim House Distributors (Pvt) Ltd நிறுவனம் 250,000 ரூபாவையும், Exim House (Pvt) Ltd நிறுவனம் 250,000 ரூபாவையும் டவர் மண்டப மன்றத்தின் பணிக்குழாம் 90,637.69 ரூபாவையும், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணிக்குழாம் மூன்று மில்லியன் ரூபாவையும், ஜே.பீ தயானந்த டி சில்வா 100,000ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் தற்போதைய மீதி 1,136,968,139.71 ரூபாவாகும்.
உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர். சட்டரீதியான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்பு தொகைகள், வரி மற்றும் அந்நியச் செலாவணி சட்டதிட்டங்களில் இருந்து விடுவிக்கப்படும்.
காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www. itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும்.












கருத்துக்களேதுமில்லை