பொதுத்தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு!
பொதுத்தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையிலேயே மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி குறித்த மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை