சுமந்திரனுக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது! கருணா

கொழும்பில் பிறந்து வளர்ந்த சுமந்திரனுக்கு  வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கட்சி வேட்பாளர்களை இன்று (திங்கட்கிழமை)   சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கல்முனை கட்சி காரியாலயத்தில்  இடம்பெற்ற  விசேட செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்கெள்வதில்லை அவருக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது. அவர் கொழும்பிலே பிறந்து வாழ்ந்தவர். சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது.  அவர் சும்மா முதலை கண்ணீர் வடித்து கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடையும் என்பதை உணர்ந்து கொண்டுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இங்கு வந்து மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் “ என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.