வடககு – கிழக்கு தமிழர் தாயகம்! மாற்றுக் கருத்துக்கு இடமில்லை! அடித்துக் கூறுகிறார் சம்பந்தன்

“நாட்டில் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வுக்கான பணிகளையும் குழப்பியடித்து முழு நாடும் பௌத்த – சிங்கள தேசம் என்ற நினைப்பில் தெற்கு இனவாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் வாய்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அடக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் தாயகம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை” எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்’ என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தன் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“கோட்டாபய அரசின் ஆதரவுடன்தான் தெற்கில் இனவாதிகள் தற்போது இயங்குகின்றனர் என்ற கருத்து எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது. எனவே, இவ்வாறானவர்களுக்கு ஆதரவு வழங்குவதை அரசு உடன் நிறுத்த வேண்டும்” எனவும் அவர் மேலும் வலியுறுத்திக் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.