கொரோனா தொற்றுக்கு உள்ளான அனைத்து கடற்படையினரும் குணமடைந்தனர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து, அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 906 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 06 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2730 ஆக பதிவாகியுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 05 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஒருவர் ராஜாங்கனை நோயாளியுடன் தொடர்புடையவர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 2041 பேர் குணமடைந்துள்ளதோடு 678 பேர் தொடர்ந்தும் வைத்திய சாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 119 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை