பணங்கொடுத்து பற்பல உதிரிக் கட்சிகளை வாக்குப் பிரிப்பிற்கென இறக்கல்…

🛑 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியற் பலத்தை சிதைப்பதற்கென ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் இரண்டு வகையான உத்திகளைக் கையாள்கிறது:

(1) பணங்கொடுத்து பற்பல உதிரிக் கட்சிகளை வாக்குப் பிரிப்பிற்கென இறக்கல்.

(2) ஊடகங்களை விலைக்கு வாங்கி, வேண்டுமென்றே கூட்டமைப்பின் மீதும் – குறிப்பாகத் தன் மீதும் – சந்தேகத்தை விதைக்கும் வண்ணம் அபாண்டமான பொய்களையும், செய்தித் திரிப்புக்களையும் வெளியிடல்.

🛑 சில ஊடகங்கள் தமிழ் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள். இந்தப் பேட்டியில் இப்படிச் சொல்லுங்கள். அப்படிச் சொல்லுங்கள். இல்லையெனில் இதைச் செய்வோம். அதைச் செய்வோம் என்கிறார்கள். இந்த நிலை மாறாவிட்டால் இந்த ஊடகங்கள் எவையென்ற விபரங்களை நான் வெளியிடுவேன்.

🛑 “தேர்தல் அண்மிக்க அண்மிக்க மக்கள் மிகவும் விழிப்பாகவும், நிதானத்துடனும் இருக்க வேண்டும். என்னைப் பற்றி என்னவெல்லாம் பிரசுரிக்கப்படும் என்று எனக்கே தெரியாது.”

🛑 சிங்கள மக்களில் கணிசமானோர் இணங்காத எந்தத் தீர்வும் நிலையானதல்ல. இதைச் சொல்லாமல் அரசியல் செய்பவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

🛑 ஒரே நாட்டுக்குள்ளே தான் தீர்வு என்பதை நாம் வெளிப்படையாக விஞ்ஞாபனத்தில் சொல்லியும், சமஷ்டி என்றால் பிரிவினை என அந்தப் பக்கத்தில் ராஜபக்சக்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

🛑 இந்தப் பக்கத்தில் ஈழம் பிடித்துத் தருவோம் என்ற வகையறா உணர்ச்சி அரசியல் செய்பவர்களும் சமாதானமான வழிகளிலே, ஒரே நாட்டுக்குள்ளே தான் நாம் தீர்வை எதிர்பார்ப்பதை — எம் மக்கள் மத்தியில் தெளிவாகச் சொல்லப் பயப்படுகிறார்கள். எமது உரிமை, உரித்துப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்பதில் உறுதி கொண்டவர்கள் இந்த உண்மைகளை வெளிப்படையாகக் கதைக்க வேண்டும்.

🛑 கடந்த ஐந்தாண்டுகளில் நாம் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் சர்வகட்சி இணக்கப்பாட்டை எட்டி இருக்கிறோம். அரசியலமைப்பு வரைபொன்று இருக்கிறது. அதை நாம் அரசியலமைப்பாக மாற்ற வேண்டும். அதற்கான ஆணையை தமிழ் மக்கள் எமக்குத் தர வேண்டும்.

🛑 விரைந்து நாம் எமக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், வெகு சீக்கிரத்தில் இந்த நாட்டில் தீர்க்கபட வேண்டிய தமிழ்த் தேசிய அரசியற் பிரச்சினை இல்லாமற் போய்விடும். எம் மக்களில் பாதிப் பேர் வெளி நாடுகளில் தஞ்சம் பெற்றுவிட்டார்கள். மீதியில் பாதி போனால் தமித் தேசியப் பிரச்சினை மொத்தமாய் நீர்த்துப் போய்விடும்.

🛑 ஆகவே, மக்கள் தொடர்ந்து விரும்பித் தம் இடங்களில் வாழும் சூழலை உடனடியாக உருவாக்கி, வேலை வாய்ப்புக்களை எம் இளைஞர்களுக்கு வழங்குவதும் காலத்தின் கட்டாயம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.