அங்கவீனமான முன்னாள் பெண் போராளிக்கு வாழ்வாதார உதவி…

யுத்தத்தின் காரணமாக ஒரு கையை இழந்த முன்னாள் பெண் போராளி ஒருவருக்கு புலம்பெயர் நிதியில் வாழ்வாதார உதவி நேற்று(31) வழங்கி வைக்கப்பட்டது.
இத்தாலி மனிதநேய சங்கத்தின் பணிப்பாளர், மகேஸ்வரநாதன் கிரபாகரனின் ஒழுங்கமைப்பில் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்று அமைத்து முன்னாள் போராளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் நிலம் மக்கள் அமைப்பு மாவீரர், போராளிகள் குடும்ப இல்லம். வி.விநோகரன் (ஈழம்) தலைமையில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வாழ்வாதாரத்திற்காக கையளிக்கப்பட்டது.
யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரகுராதா நிர்மலாவதி அவர்களின் நினைவாக அவரின் பிள்ளைகளால் இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் நிலம் மக்கள் அமைப்பானது வறுமையில் உள்ள முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்