காணொளி நேரலையில் இலங்கை தேர்தல் – தமிழரின் (தலை) அரசியல் விதி…
இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக Youtube மற்றும் Facebook வாயிலாக வீடியோ நேரலை ஒளிபரப்பாகவுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக வீடியோஸ்பதி (Videospathy) ஊடக ஒருங்கிணைப்பில் Youtube மற்றும் Facebook வாயிலாக வீடியோ நேரலை ஒளிபரப்பாகவுள்ளது.
இலங்கை, இந்திய நேரம் மாலை 5:30 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியினை புலம்பெயர் வானொலித்துறையில் மூத்த ஊடகவியலாளர் நவரட்ணம் ரகுராம் தொகுத்து வழங்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் பரந்தாமன் (ஆய்வாளர், பத்தி எழுத்தாளர்), திருகோணமலையில் இருந்து யதீந்திரா (அரசியல் ஆய்வாளர், திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்தின் (Centre for Strategic Studies – Trincomalee (CSST) நிறைவேற்று இயக்குனர், கொழும்பில் இருந்து ஏ.பி.மதன் (தமிழ்மிரர் நாளேட்டின் பிரதம ஆசிரியர், வவுனியாவில் இருந்து ச.விமல் (அறிவிப்பாளர், வானொலி/ தொலைக்காட்சி நிகழ்சி தொகுப்பாளர்), மட்டக்களப்பில் இருந்து ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல், மலையகத்தில் இருந்து ஆர். சனத் (leadnews7.com இன் ஆசிரியர் / சுதந்திர ஊடகவியலாளர்) ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை