வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
1261 ஆவது நாளாக வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட தளத்தின் முன்னால் இன்று இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என சர்வதேசம் தலையீட்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என கோரியதுடன், எதிர்வரும் தேர்தலில் தமக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனின்கே தமது ஆதரவு எனவும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் அமரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியிருந்ததுடன், சைக்கிள் சின்னம் பதித்த பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை