140,000 டொலர் உட்பட பல கோடி ரூபா பணத்துடன் ஒருவர் வசமாக சிக்கினார்…

தெமட்டகொடை பிரதேசத்தில் பல இலட்சம் டொலர்கள் உள்ளிட்ட பல கோடி ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளன.

தெமட்டகொடை பிரதேசத்தில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க  டொலர் நோட்டுகள், 3 கோடி 13 இலட்சம் இலங்கை ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் 4 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 9.10 மணியளவில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு வடக்கு பிரிவு வீதித் தடை பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, தெமட்டகொடை பிரதேசத்திலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது. இதன்போது குறித்த பணம் மற்றும் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் கொழும்புத் துறைமுகப் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்