தேர்தல் சட்டத்தை மீறிய ஏழு வேட்பாளர்கள் கைது…
தேர்தல் சட்டத்திட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 7 வேட்பாளர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்தார்.
அத்துடன் தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய, பொலிஸார் 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
……..
கருத்துக்களேதுமில்லை