2015ஆம் ஆண்டினை விடவும் கூட்டமைப்பு இம்முறை மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் – இரா.சாணக்கியன்…

2015ஆம் ஆண்டினை விடவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை மட்டக்களப்பில்
அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு
மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இறுதி தேர்தல்
பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக்
குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”தமிழ் தேசிய
கூட்டமைப்பின் நான்காவது ஆசனத்தினை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு அங்கம் தான் அதிகளவான சுயேற்சை குழுக்களும், சுயேற்சை
வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது சுயலாபத்திற்காகவே
களமிறங்கியுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்காவது ஆசனத்தினை இல்லாமல் செய்ய வேண்டும்
என்பதே இவர்களின் இலக்கு“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.