அம்பாறை மாவட்டத்துக்கான வாக்குப் பெட்டிகள் பாதுகாப்புடன் விநியோகம்…

நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்ற  தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்துக்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப வளாகத்தில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் காலை முதல்  கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
திகாமடுல்ல தேர்தல்  மாவட்டத்தில்  அம்பாறை, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை,  ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
மேலும் இவ்வாக்குப் பெட்டிகள்  பொலிஸ் பாதுகாப்புடன்  வாக்கெடுப்பு நிலையங்களை எடுத்து செல்லப்பட்டு வருகின்றன.
இதே வேளை அம்பாறை  மாவட்டத்தில்  பாராளுமன்ற  தேர்தலுக்காக 525 வாக்களிப்பு நிலையங்களில் 513979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க  தெரிவித்தார்.
அம்பாறையில் இடம்பெற்றுவரும் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டி.எம்.எல்.பண்டாரநாயக்க மேலும் கூறியுள்ளதாவதுஇ கல்முனை  தேர்தல் தொகுதியில் 76283  பேரும் சம்மாந்துறை  தேர்தல் தொகுதியில் 89057 பேரும் பொத்துவில்  தேர்தல் தொகுதியில் 143229  பேரும்  அம்பாறை   தேர்தல் தொகுதியில் 174385  பேரும்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் கடமைக்காக இம்மாவட்டத்தில் 7000 அரச உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் வாக்குகள் எண்ணும் நிலையங்கள் 74  இம்மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வாகன போக்குவரத்துக்கயும் இலவசமாக முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.