கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவத்தின் தீர்த்த உற்சவமானது இன்று குறைந்தளவிலான பக்தர்களுடன் இடம்பெற்றது…
கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவத்தின் இறுதி நாளாகிய 04/08/2020 இன்றயதினம் தீர்த்த உற்சவமானது காலை 8.00 மணியளவில் குருக்கள் மற்றும் பூசை உபய காரர்கள் பங்குபற்றலுடன் சமுத்திரத்தில் சுகாதார முறைப்படி தீர்த்தஉற்சவம் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இக் காலங்களில் குறைந்தளவிலான அடியார்களே வழிபாட்டிற்கு வருகை தந்திருந்தனர் இக் காலங்களில் மேலும் ஆலய தொண்டர்களும்,இராணுவத்தினர்,கடற்படையினர் தங்களின் கடமைகளினை சிறப்பான முறையில் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை