தமிழ்மக்களது அடிப்படை அரசியல் உரிமைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் உழைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்…
தமிழ்மக்களது அடிப்படை அரசியல் உரிமைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும்
உழைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்!
தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எமது அன்பான உறவுகளே!
கடந்த மே 18, 2009 அன்று முடிவுக்கு வந்த போருக்குப் பின்னர் மூன்றாவது தடவையாக தாயக
மக்கள் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார்கள். இந்தப் பொதுத் தேர்தலில் தென்னிலங்கை
சிங்கள – பவுத்த தேசியக் கட்சிகள் உட்பட பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வடக்கிலும்
கிழக்கிலும் போட்டியிடுகின்றன.
தமிழர் தாயகம் எங்கும் அதாவது வடக்கு கிழக்கு என்ற இரண்டு பகுதிகளையும் உள்ளடக்கிய
நிலப்பரப்பில் காலூன்றி வலுவாக உள்ள ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்.
பெரிய வாக்குத் தளம் அந்த கட்சிக்கு மட்டுமே உண்டு. ஏனைய கட்சிகள் பெரும்பாலும்
யாழ்ப்பாணக் குடாநாட்டை மையமாக வைத்து இயங்கும் கட்சிகளாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ததேகூ அரசியல் தளத்திலும் பொருளாதாரத் துறையிலும் பல
சாதனைகளைச் சாதித்துள்ளது.
(1) த.தே.கூ இன் இடைவிடாத முயற்சி காரணமாகவே தமிழ்மக்களது இனச் சிக்கல் இன்று ஐக்கிய
நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பேசுபொருளாக இருக்கிறது. 2009 இல்
பயங்கரவாதத்தை ஒழித்த சிறிலங்காவைப் பாராட்டி இதே சபையில் ஒரு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. அதனைத் தலை கீழாக்கி கடந்த 2015 ஒக்தோபர் மாதம் முதலாம் நாள்
ஐநாமஉ பேரவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 30-1 தீர்மானம் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிய சிறிலங்கா அரசு அதில்
இருந்து இந்த ஆண்டு விலக்கிக் கொண்டாலும் அந்தத் தீர்மானம் அந்த அரசின் தலைமீது
தொங்கிக் கொண்டிருக்கும் கூர்வாளாகத் இருந்து வருகிறது.
(2) நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசியல் நிருணய சபை 82 தடவைக்கும் மேலாகக் கூடி
ஒரு இடைக்கால அறிக்கையை 2018 இல் வரைந்தது. இந்த வரைவை வரைவதில் ததேகூ இன்
பங்களிப்பு பாரிய அளவில் இருந்தது. குறிப்பாக இரா. சம்பந்தன் ஐயா மற்றும் மதியாபரணம்
சுமந்திரன் இருவரது பங்களிப்பும் போற்றத்தக்கதாக இருந்தது. ஆனால் நல்லாட்சி அரசில்
ஏற்பட்ட பிளவு காரணமாக ஆளும் தரப்புக்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை
இல்லாது போய்விட்டது. இதனால் அந்த வரைவின் அடிப்படையில் ஒரு புதிய அரசியலமைப்பு
வரையும் வாய்ப்பு இழக்கப்பட்டுவிட்டது. இருந்தும் இனச் சிக்கலுக்கான தீர்வு பற்றி
எதிர்காலத்தில் பேசப்படும் போது இந்த இடைக்கால அறிக்கை ஒரு தொடக்கப் புள்ளியாக
இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. எந்தத் தீர்வானாலும் தமிழ்மக்கள் தனித்துவமான மக்களாகவும்
கருத்துக்களேதுமில்லை