முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தியத் தூத ரகத்தின் நிதிப் பங்களிப்பில் பொது நூலகம்…

பொது நூலகமும் கலாச்சார மண்டபமும் முல்லையில் இந்திய நிதிப் பங்களிப்பில்!

இருபது கோடி ரூபா செலவில் அமையும்

யாழ்ப்பாணம்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தியத் தூத ரகத்தின் நிதிப் பங்களிப்பில் பொது நூலகம் மற்றும் கலாச்சார மண்டபம் என்பன அமைக்கப்படுவது தொடர்பில்

தூதரக அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நகரின் மத்துயில் உள்ள நீதிமன்றம் அருகில் பொது நூலகம் ஒன்று அமைக்கும் அதே நேரம் முள்ளியவளை யில் ஒரு கலாச்சரா மண்டபமும் அமைக்கப்பட வுள்ளது. இவ்வாறு அமைக்கப்படவுள்ள இரு பிரதான திட்டங்களிற்காகவும் இருபது கோடி ரூபா நிதியினைப் பங்களிக்க இந்தியத் தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இரு திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கடந்த வாரம் யாழில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் முல்லைத்தீவிற்கு பயணித்து இடங்களை பார்வையிட்டமையோடு மாவட்டச் செயலகத்திலும் கலந்துரையாடல்களை மேற் கொண்டிருந்தனர்.

இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு திட்டத்திற்கும் இணக்கம் தெரிவித்த இந் திய அதிகாரிகள் திருகோணமலைக்கும் முல்லைத்தீவிற்குமான போக்குவரத்தினை இலகு வாக்கும் நோக்கில் புல்

மோட்டையில் பாலம் அமைப்பது தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். இப்பகுதியில் 800 மீற்றர் நீளமான பாதை அமைக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப் பட்டது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்