வவுனியாவில் அதிகளவிலான வாக்குப்பதிவு …

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று (05.08.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதிகளவிலான மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

கிரமப்புறங்களை சேர்ந்த மக்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதுடன் நகர் புறங்களில் வாக்களிப்பானது மந்தகதியில் நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக வைரவப்புளியங்குளம் , குருமன்காடு , நெளுக்குளம் ,கூமாங்குளம் ஆகிய பகுதியில் மக்கள் வரிசையில் நின்று அதிகாலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்திருந்ததுடன் வவுனியா நகர்புறங்களில் அமைந்துள்ள சில வாக்களிப்பு நிலையங்கள் அதிகாலை தொடக்கம் மக்கள் மந்தகதியிலேயே வாக்களித்து வருகின்றனர்.

வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு 4200 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் தேர்தல் கடமையில் 1500க்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களும் பணியாற்றி வருகின்றனர்.

வவுனியாவில் இன்று காலை 7.00 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகி அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றதுடன் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் காலநிலையை பொறுத்தவரையில் வாக்களிப்புக்கு சாதகமான காலநிலை காணப்படுகின்றது. 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.