ரவிராஜின் உருவச்சிலை கறுப்புத் துணியால் மூடி போராட்டம்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி அமரர் ரவிராஜின் யாழ்ப்பாணத்திலுள்ள உருவச் சிலையை கறுப்புத் துணியால் மூடி எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிய நிலையில், அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டிருந்ததோடு திட்டமிட்ட வகையில் தோற்கடிக்கப்பட்டதாகவும், சுமந்திரன் சதி செய்ததாகவும் கூறி நேற்று பாரிய களேபரம் ஏற்பட்டது.

எனினும் இறுதியில் சுமந்திரன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி யாழ். சாவக்கச்சேரியில் அமைந்துள்ள மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலை மீது கறுப்பு சால்வையொன்று போடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்