அமைச்சரவை திங்கள் பதவிப்பிரமாணம்-இம்முறை 26 அமைச்சர்கள்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த பிரதமராக மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை  ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கின்றார்.

இதற்கான நிகழ்வு களனி ரஜமகா விகாரையில் நாளை  இடம்பெறவுள்ளது.

இதேவேளை புதிய நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சரவையும் எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை சுவவேளையில் பதவிப்பிரமாணம் செய்யவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல இம்முறை 26 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அரச உயர்மட்டத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்