பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்று நீக்கம்…

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன எனச் சுகாதார அமைச்சின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளினதும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினதும் கண்காணிப்பின் கீழ், முப்படையினரின் உதவியுடன் தொற்றுநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னராக பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படவுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்