காலம் தாழ்த்தாமல் மக்களுக்கான சேவையை உடன் துரிதப்படுத்துக! – அநுரகுமார வேண்டுகோள்…

“நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்கியுள்ளமையினால் ஜனாதிபதியும் பிரதமரும் காலம் தாழ்த்தாது மக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்த வேண்டும்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நிறைவடைந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சுமார் 04 இலட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே, எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மதிப்பிடுகையில் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் கடந்த 2015 ஆண்டை விட இம்முறை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இதேவேளை, புதிய அரசு பொறுப்பேற்ற முதல் மக்களுக்கான அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய விடயங்களை மேற்கொள்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் எனக் கூறியுள்ளது.

இந்தநிலையில் பொதுத் தேர்தலின் ஊடாக மக்கள் அதற்கான ஆணையை வழங்கியுள்ளனர்.

எனவே, எதிர்வரும் காலங்களிலும் காரணங்களைக் கூறிக் கொண்டிருக்காமல் மக்களுக்கான சேவையை ஜனாதிபதியும் பிரதமரும் துரிதப்படுத்த வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.