திருகோணமலை மாவட்டம் பூராகவும் இருந்து 1171 பட்டதாரி பயிலுனர்களாக தெரிவு

ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் தொழில் வழங்கும் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளில் 50000 பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவது தொடர்பான பெயர்பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 1171 வேலையற்ற பட்டதாரிகள் பட்டதாரி பயிலுனர் நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் .
கோமரங்கடவெல பிரதேச செயலக பிரிவில் 06, கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவு 66, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு 289, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு 69, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு 332, பதவிசிறிபுர பிரதேச செயலாளர் பிரிவு 16, சேருவில பிரதேச செயலாளர் பிரிவு 23, தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு 74, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவு 268, வெருகல்_ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் 28 என மொத்தமாக 1171 பட்டதாரிகளின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 திருகோணமலை மாவட்டத்தில் 42 நிறுத்தி வைக்கப்பட்டுள்ள(pending) நிலையிலும், 1002 நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிராகரிப்பிற்கான காரணங்களையும் உரிய அமைச்சு தெரிவித்துள்ளது பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக் குழு மூலமாக பட்டம் உறுதிப்படுத்தாமை, வெளிநாட்டு பல்கலைக் கழக பட்டம், வயது 45 யை தாண்டியிருத்தல்,பிரதேச செயலாளர் கிராம சேவகர் கையொப்பமிடாமை, ETF,EFF  பெறப்பட்டமை, வெண்ணப்பம் மாத்திரம் அனுப்பியமை,பட்டச் சான்றிதழ் இணைக்காமை உள்ளிட்ட காரணங்களினால் நிராகரிப்பு இடம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை எதிர்வரும் (02.09.2020)அருகில் உள்ள உரிய பிரதேச செயலகங்களுக்கு சமூகமளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஸ்பர் ஏ ஹலீம்_

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.