விக்னேஸ்வரன் வாயை உடன் அடக்க வேண்டும் இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து ஓட ஓட விரட்டியடிப்போம் என்கின்றது- மஹிந்த அணி!!
விக்னேஸ்வரன் வாயை
உடன் அடக்க வேண்டும்
இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து ஓட ஓட
விரட்டியடிப்போம் என்கின்றது மஹிந்த அணி
“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி. தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து அவரை ஓட ஓட வீட்டுக்கு விரட்டியடிப்போம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேவேளை, முதல் மதம் பௌத்தம். மற்ற இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவைச் சார்ந்தவையாகும். இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம்; ஓட ஓட வீட்டுக்கு விரட்டியடிப்போம்.
தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் ஊளையிடலாம். ஆனால், அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் எந்தப் பயனும் அவர்களுக்குக் கிடைக்காது.
முதலமைச்சராகப் பதவி வகித்து வடக்கு மாகாணத்தை நாசமாக்கிய விக்னேஸ்வரன், இனவாதத்தையும் மொழிவாதத்தையும் மதவாதத்தையும் வைத்து அரசியல் நடத்தலாம் என்ற நோக்குடன் தற்போது நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவரின் இலக்குகள் எதுவும் எம்மை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேறாது” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை