பாதையில் குப்பை போட வேண்டாம் என வலியுறுத்தி மட்டக்களப்பில் விழிப்புணர்வு நிகழ்வும் பொதுச் சிரமதானமும்…

(வவுணதீவு நிருபர்) 

சேர்ந்து காப்போம் கிழக்கை எனும் தொனிப்பொருளில்  ”  பாதையில் குப்பை போட வேண்டாம் என வலியுறுத்தி மட்டக்களப்பு இராணுவத்தினரும் மட்டக்களப்பு மாநகரசபையும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு நிகழ்வும் பொதுச் சிரமதானப் பணியும் ஞாயிற்றுக்கிழமை (04) மட்டக்களப்பு நகரில்  முன்னெடுக்கப்பட்டது .

கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்  ஜெ . சி . கமகே   அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இதன் போது சிரமதானங்கள் இடம் பெற்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு  231 வது இராணுவ பிரிவின் நான்காவது கஜபா  பிரிவு இராணுவ அதிகாரிகளுடன்  மட்டக்களப்பு  மாநகர சபை  இணைந்து முன்னெடுக்கப்படும்  ” சேர்ந்து காப்போம் கிழக்கை எனும் தொனிப்பொருளில்  ”  பாதையில் குப்பை போட வேண்டாம் என வலியுறுத்தும் நிகழ்வாக இது அமைத்திருந்தது
231 வது இராணுவ கட்டளை அதிகாரி  கேணல் எஸ் .பி  .ஜெ  தலைமையில்  கேணல்  ஜி . ஆர் . எல் .எல்  .வழிகாட்டலின்  கீழ்  நடைபெற்ற இந்  நிகழ்வில் மட்டக்களப்பு மாதார ஆணையாளர் கே.சித்திரவேல், மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உயர்கல்வி தொழி நூட்ப கல்லூரியின் பணிப்பாளர் எஸ். ஜெயபாலன், இளைஞர் கழகத்தினர் மற்றும் சுகாதார பகுதியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

இதன்போது பேருந்து தரிப்பிட  வளாகம், லேக் வீதி, ஊரணி மற்றும் மட்டக்களப்பு நகர் பகுதி போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் , குப்பகள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.