பரந்தன் உமையாள்புரத்தில் காணி சுவீகரிக்க முயன்ற வனவளத்திணைக்களம் உடன் அவ்விடம் விரைந்த தவிசாளர்…

பரந்தன் உமையாள்புரம் பகுதியில் இன்று வனவளத் திணைக்களத்தினால் இன்று அடாத்தாக எல்லையிடும் முயற்சியில் வனவளத் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர். இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக கொழும்பு சென்று உள்ளமையினால் உடனடியாக அவ்விடம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்கள் குறித்த பகுதிக்கு சென்று மக்களுடன் இணைந்து சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்தினார்

 மொத்தமாக 344 ஏக்கர் வரையான வீஸ்தீரணமுடைய காணிகளையே குறித்த திணைக்களம் சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
மையானம் நெல்காயவிடும்தளம் பொதுமக்களின் வீடுகள் வயல்கள் உள்ளடங்கலாகவே உள்ள காணிகளையே சுவீகரிக்க முயற்சித்துள்ளனர்.
இவற்றுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் மக்களிடம் உள்ள நிலையில் 30 வருடங்களாக வயல்களை விதைத்து வருகின்ற நிலையில் தொடர்ந்து வயலின் விதைத்தால் கைது செய்யப்படுவர் என்றும்  வனவளத்திணைக்களத்தினர் அச்சுறுத்தல் விடுத்தனர்.குறித்த விடயம் உடனடியாக பிரதேச செயலாளர் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த சுவிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் பிரதேச சபையின் தவிசாளருடன் திருச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் குறித்து கிராமப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தடுத்து நிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.