திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவை மாவட்ட சர்வமத தலைவர்கள் சந்திப்பு…

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவை இன்று(8)  மாவட்ட சர்வமத தலைவர்கள் சந்தித்தனர்.
இதன்போது மாவட்ட மட்டத்தில் தங்களால்  மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்க அதிபரிற்கு எடுத்துரைத்தனர்.
அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபராக பதவியேற்ற நாள் தொட்டு இன்றுவரை அவர் இன மத மொழி வேறுபாடின்றி ஆற்றிவரும் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை  விசேட அம்சமாகும்.

இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குறிய கிறிஸ்ட்டியன் நோயல் இம்மானுவேல், காளி கோவில் தேவஸ்தான இரா.இரவிச் சந்திரகுருக்கள்,கந்தளாய் கிளை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் இன்சாப் மௌலவி உட்பட சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்