கொரோனா ஆபத்துக்குள் ராஜபக்சக்களுக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் அதிர்ச்சி வைத்தியம்…

ரிஷாத்தின் சகோதரரின் விடுதலையை
கண்டித்து 100 எம்.பிக்கள் நேற்று கடிதம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு நேற்றுக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

இதற்கமைய, குறித்த கடிதத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியுடன், தொலைபேசியில் உரையாடினார் என்று குற்றஞ்சாட்டி சந்தேகத்தின் பேரில் ரியாஜ் பதியுதீன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதற்கமைய, விசாரணைகளின் பின்னர், கடந்த மாதம் 30 ஆம் திகதி ரியாஜ் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையிலேயே, அவர் விடுவிக்கப்பட்டமக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இது தொடர்பில் முழுமையாக ஆராயுமாறும் வலியுறுத்தி குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்