ரிஷாத்தைப் பழிவாங்காதீர்! கைது முயற்சியை நிறுத்து!! – அரசிடம் சஜித் இடித்துரைப்பு…

“அரசுடன் இணையவில்லை என்ற காரணத்துக்காகப் பழிவாங்குவதற்காகவும், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான தீர்ப்பால் ஏற்பட்டுள்ள அவமானத்தை மூடிமறைப்பதற்காகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்தக் கைது நடவடிக்கையை அரசு உடன் நிறுத்த வேண்டும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரிஷாத்தைக் கைது செய்யும் முயற்சி அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று நாட்டிலுள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்றது.

ரிஷாத் கைதுசெய்யப்பட்டால் அதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ளமாட்டோம். அதற்கு எதிராக நாம் போராடுவோம். நாடாளுமன்றத்தில் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பலமாக இருக்கும்.

இதேவேளை, நாட்டின் நீதித்துறை சுயாதீனத்தன்மையுடன் செயற்பட வேண்டும். பழிவாங்கல் நடவடிக்கைக்கு நீதித்துறை துணைபோகாது என்று நாம் நினைக்கின்றோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.