அமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி மற்றும் 40 ரவைகள் மீட்பு…

பாறுக் ஷிஹான்

அமெரிக்க நாட்டு  தயாரிப்பான துப்பாக்கி ஒன்று உட்பட அதற்கு  பயன்படுத்திய 40 ரவைகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாரை மாவட்ட திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கிடைக்கப்பெற்ற நேற்று(17) மாலை  புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய சாகாமம் பெரியதிலாவ ஊறக்கை பிரதேசமொன்றில் பிளாஸ்டிக் குளாய் ஒன்றில்   மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  குறித்த ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இத்தேடுதல் நடவடிக்கையானது திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.டபிள்யு.வி.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டதுடன்  குறித்த துப்பாக்கி சுத்தம் செய்யப்பட்டு இயங்கு நிலையில்  உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கைப்பற்றப்பட்ட ஆயுதம் மற்றும் ரவைகளையும் பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கான பணியினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்