புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

(அப்துல்சலாம் யாசீம்)

திருக்கோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவான்  பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் (18) மூதூர் பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வட்டவான் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான வாகனம் சுற்றுவதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் கார் மற்றும் கெப் வாகனங்கள் இரண்டையும் சந்தேகநபர்கள் 9 பேரையும் கைது செய்துள்ளதாகவும்,அதில் வைத்தியர் ஒருவர் உள்ளடங்குவதாகவும்  பொலிசார் தெரிவித்தனர்.
 கைது செய்யப்பட்டவர்கள் தோப்பூர்,காலி,அத்துறுகிரிய,
நிலாவெளி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 45 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்