நாவிதன்வெளி பகுதி சிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கல்…

பாறுக் ஷிஹான்


நாடு பூராகவுமுள்ள குறைந்த வருமான பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கான  5000/-  மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(19) மாலை  நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்   பி.குணச்செல்வி தலைமையில்   இடம்பெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன்  கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன்  ஏனைய  அதிதியாக நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா,   கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், உள்ளிட்ட  அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து   கொண்டு உதவி தொகைகளை வழங்கி வைத்தனர்.

இன்றைய நிகழ்வில் முதல் கட்டமாக 20 சிறுநீரக நோயாளிகளுக்கான பயனாளிகளுக்கு இரண்டு மாதாங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்