யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பெரியகுளம் சின்னக்குளம் ஆகியவை சீரமைக்கும் நடைவடிக்கை…

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பெரியகுளம்   சின்னக்குளம்  ஆகியவை சீரமைக்கும் நடைவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக கடந்த 3 தினங்களாக குறித்த இரு குளங்களில் போடப்பட்ட குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் என்பன கனரக வாகனங்களின் உதவியுடன் அகற்றப்பட்டு வருகின்றன.

யாழ் மாநகர சபையின் 2020 ஆண்டிற்கான நிதியொதிக்கீட்டின் கீழ்   இப்பகுதியில் சீரற்று காணப்படும் குறித்த இரு குளங்கள் மற்றும்  வடிகால்கள் அனைத்தும் இனங்காணப்பட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்   ஜே-87 ஜே-88 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளியின் சில பகுதி  மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டதுடன் இதற்கு   நிரந்தரத் தீர்வொன்று அவசியம் குறித்தும்  மாநகர சபை உறுப்பினரால் யாழ் மாநகர முதல்வரின் கவனத்திற்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்  இதன் ஒருகட்டமாக இரு குளங்களும் தூர்வாரப்பட்டு  நீர் வழிந்தோடும் சீரற்ற  வடிகான்கள்   அடையாளம் காணப்பட்டு  சுத்தம் செய்யப்பட்டு  குப்பைகூழங்களை அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையில் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம்  பிரசன்னமாயிருந்ததுடன்   யாழ்ப்பாண மாநகர சபையின்  அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகர தொழிலாளர்கள்  கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.