தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று…

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களைப் பரிசோதனை செய்ய கொக்கல சுற்றுலா விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து தனிமைப்படுத்தி முடிந்த நிலையில் வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த 24 பேரும் தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் வீடு திரும்பவிருந்த போது எடுக்கப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்