ஆளுங்கட்சிக்குள் தொடரும் சர்ச்சை – மஹிந்தவின் கூட்டத்தை மீண்டும் பகிஷ்கரித்தார் விஜயதாஸ எம்.பி…

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தை அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச பகிஷ்கரிப்பு செய்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விஜயதாஸ எம்.பி. தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்.

அமைச்சரவை பங்கீட்டிலும் அவருக்கு முதன்மை இடம் வழங்காத நிலையில் அது குறித்து அதிருப்தியிலிருந்த அவர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டங்களைப் பகிஷ்கரித்து வந்தார்.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற 20ஆவது திருத்தம் குறித்து பிரதமரின் தெளிவுபடுத்தல் கூட்டத்தையும் விஜயதாஸ ராஜபக்ச பகிஷ்கரிப்பு செய்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக ஆளுங்கட்சியிலுள்ள மேலும் சில முக்கியஸ்தர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவந்த போதிலும் ஓரளவுக்கு அந்த எதிர்ப்பலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தாம் எடுத்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.