சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மனைப் பொருளாதார அலகுகளை பலப்படுத்தச் செய்யும் வேலைத்திட்டம் கல்முனையில்…

சமூர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பண்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக
சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை (17–24) முன்னிட்டு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள சமூர்த்தி பயனாளிகளின் குடும்பங்களின்
மனைப் பொருளாதார அலகுகளை பலப்படுத்தச் செய்யும் வேலைத்திட்டம்  இன்று (2020/10/21) கல்முனை பிரதேச செயலக கிராம  சேவகர் பிரிவான கல்முனைக்குடி முதலாம் கிராம சேவகர் பிரிவில்
சமூர்த்தி தலைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.முஹம்மட் சாலி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி,  திருகோணமலை  மற்றும் அம்பாறை  ஆகிய மாவட்டங்களில் பரீட்சித்துப் பார்க்கும் முன்னோடிக் இக்கருத்திட்டமானது
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் போக்கிற்கமைய மேற்படி காலத்திற்குள் நாடுபூராகவும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களை
சுயலாபத்துடன் கூடிய வருமானம் பெறுவோர்களாக ஆக்கும் பொருட்டு சமுர்த்தி நிவாரணம் பெறுவோரை இனங்காண்பது இதன் முக்கிய குறிக்கோளாகும்.
இதன் மூலம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் உள்ள தன்னார்வத்துடன் வலுவூட்டக்கூடியவர்களையும்,  வலுவூட்ட முடியாதவர்களையும் அவர்களின் பொருளாதார, சமூக சுற்றாடல் மற்றும் சட்டம் போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டு கீழ், நடுத்தர மற்றும் மேல் மட்டம் என குடும்பங்களை வகைப்படுத்தி ஒவ்வொரு வீட்டிலும் தகவல் திரட்டப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் அல்-ஹாஜ் எம்.எம்.நஸீர், கெளரவ அதிதிகளாக கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி முகாமையாளர் எம்.புவிராஜ்
மருதமுனை நற்பிட்டிமுனை வங்கி முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் சிறப்பதிகளாக கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எஸ்.நயீமா, வலய உதவி முகாமையாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்.

இதன் போது அனைத்து சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவு சமூர்த்தி பயனாளிகளின் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் வலயங்களாக பிரிக்கப்பட்டு தகவல்களை திரட்டினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்