மயிலத்தமடு, மாதவனை விவகாரம் – ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் இரா.சாணக்கியன்!

மயிலத்தமடு, மாதவனை விவகாரம் – ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்
இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டு சென்றுள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போதே மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக
இரா.சாணக்கியனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வட கிழக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எல்லைப்புற காணிகள்
பகிர்ந்தளிக்கப்படுவது மற்றும் மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள
மேய்ச்சல் நிலம் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.

அத்துடன், அத்துமீறிய சிங்கள குடியேற்றம், கிழக்கு மாகாண ஆளுநரின்
செயற்பாடுகள் காரணமாக தனது சிறப்புரிமை மீறப்பட்ட விவகாரம், மற்றும் சமகால
அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது.

இதுகுறித்து செவிமடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த விடயங்கள்
குறித்து ஆராய்வதாக தெரிவித்துள்ளார்·

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.