வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 11 பேருக்கு கொரோனா தொற்று, இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பு மக்கள் அவதானத்துடன் செயற்படவும் – உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் -ஜீ.எஸ்.ஜயசுந்தர

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை, செம்மண்ணோடை, மீராவோடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பதினொரு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

பேகலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த 25 பேரிடம் மேற்கொண்ட பீ.சி.ஆர். பரிசோதனையில் பதினொரு பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. இது இன்னும் பரவக் கூடும் நிலை காணப்படுகிறது. எனவே மக்கள் வீணாக வெளியில் செல்லவேண்டாம் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், மக்களாகிய உங்களுடைய பாதுகாப்பு உங்களுடைய கைகளில்தான் உள்ளது. அதனால் தயவுசெய்து சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து அனைவரும் வீட்டில் இருந்து கொண்டு எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு,  இன்று மாலை உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தவுடன் குறித்த பிரதேசங்களுக்கு ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் இதுவரை பதினொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதை தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேண்டி இன்று காலை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற அவசரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.