மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகள் வெளியிடப்படவுள்ளன.

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து மீன்பிடித் துறைமுகங்களிலும் வைரஸ் பரவியுள்ள நிலையில் மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார
வழிமுறைகள் வெளியிடப்படவுள்ளன.

மேற் குறித்த இடத்தில் கொரோனா தொற்று உறுதியானதை
அடுத்து, காலி மற்றும் பேருவளை மீன்பிடித் துறைமுகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த சூழலில், நாடு முழுவதும் கொரோனா தடுப்புக்கான சுகாதார வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது மீன்பிடித் துறைமுகங்களுக்கு வழிகாட்டல் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்