அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள்…

26.10.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் பின்வருமாறு:

 

01) புதிய பிரதேச செயலகப் பிரிவு நிறுவுதல், தற்போது நிறுவப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவை வர்த்தமானி மூலம் அறிவித்தல், கிராம அலுவலர் பிரிவை நிறுவுதல் மற்றும் மீளாய்வு செய்வதற்காக எல்லை நிர்ணயக் குழுவை நியமித்தல்

அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி தேவைகளுக்காகவும் மக்களின் தேவைகளுக்காகவும் நாட்டில் புதிய பிரதேச செயலகங்கள் நிறுவுவதற்கு, சில செயலகப் பிரிவுகள் மீள நிறுவுவதற்கும் தற்போது நிறுவப்பட்டுள்ளதும் ஆனாலும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படாததுமான பிரதேச செயலகப் பிரிவுகளில் எல்லை நிர்ணம் செய்வதற்கும், வர்த்தமானி அறிவித்தலுக்கும் புதிய கிராம அலுவலர் பிரிவை நிறுவுதல் மற்றும் தற்போதுள்ள கிராம அலுவலர் பிரிவுகளை மீளாய்வு செய்வதற்கும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களால் பல கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இச்செயற்பாடுகளுக்காக ஐந்து (05) வருடத்திற்கு ஒருமுறை எல்லை நிர்ணயக் குழு நியமிக்கப்படல் வேண்டியதுடன், இறுதியாக 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையிலுள்ள தொழிநுட்பக் குறைபாடுகளால் வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் குறித்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிப்பதற்காக நீர்ப்பாசன அமைச்சர், மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றம் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அவர்களின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02) அதிக பயன்களைக் கொண்ட சமூக அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவின் பிரதான அனுசரணையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசு மற்றும் இந்தியக் குடியரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்

இரு நாடுகளுக்;குமிடையில் இரட்டை தரப்பு தொடர்புகள் மற்றும் அபிவிருத்திப் பங்களிப்புக்களை பலப்படுத்தும் நோக்கில் சிறியளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக இந்திய அரசு 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைக்கு பிரதான நிதியனுசரணைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பிரதான நிதியனுசரணையின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தித் துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏற்புடைய பல கருத்திட்டங்கள் அரச நிறுவனம், மாகாண உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய 2020 – 2025 வரையான 05 வருட காலத்தில் அதிக பெறுபேறுகளைக் கொண்ட சமூக அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு நிதியனுசரணை வழங்குவதற்கு இந்தியக் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய இந்திய அரசுடன் இப்புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

03) இலங்கை பிணைமுறிகள் மற்றும் விசாரணை ஆணைக்குழு சட்ட மூலம்

இலங்கை பங்குச் சந்தை சர்வதேச ரீதியாக இயங்கும் சரியான முறைகளுக்கமைய ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சரத்துக்களை உள்ளடக்கி, தற்போதுள்ள 1987 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க இலங்கை பிணைமுறிகள் மற்றும் விசாரணை ஆணைக்குழு சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை அறிமுப்படுத்துவதற்காக சட்டமூல வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

04) கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தின் இயலளவை விரிவாக்கும் கருத்திட்டம்

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு கொள்கலன் முனையம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அதன் நிர்மாண நடவடிக்கைகள் 2016 டிசம்பர் மாதம் 01 நிறைவு செய்யப்பட்டு தற்போது வணிக நடவடிக்கைகள் இடம்பெறுகின்;றன. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொழும்பு சர்வதேச கொள்கலன் கம்பனி (CICT) இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. குறித்த முனையத்தின் தற்போதுள்ள கேள்வி மற்றும் எதிர்கால வர்த்தக வாய்ப்புக்கள் தொடர்பாக கவனத்தில் கொண்டு நிர்மாணங்கள் எதுவும் மேற்கொள்ளாமல் குறித்த பரப்பளவு இயலளவை அதிகரித்து மட்டும் குறித்த திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்து புதிய உபகரணங்களை அறிமுகம் செய்தல், தற்போதுள்ள உபகரணங்களை மேம்படுத்தலும் புதிப்பித்தல் மூலம் முனையத்தின் வினைத்திறனை அதிகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மூலோபாய அபிவிருத்தி சட்டத்தின் சரத்துக்களுக்கமைய குறித்த வரி சலுகையை வழங்குவதற்கான கட்டளை அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரசுரிக்கவும், நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

05) இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடன் திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி மூலம் மேலதிக நிதியுதவியைப் பெறல்

கொவிட் தொற்று நோயால் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்ககளால் உருவாகியுள்ள நிலைமைக்குத் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில், 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர பதிலளிப்பு கூறுகள் உள்ளிட்ட 165 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி உடன்பாடு தெரிவித்துள்ளது. அவ்வாறே, குறித்த கடன் தொகைக்கு அப்பால் வறுமையொழிப்புக்காக ஜப்பான் நிதியத்தின் கீழ் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் நிலைக் கல்வி பிரிவுகளை மேம்படுத்தும் திட்டத்திற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு செலவு இலகு கடன் தொகையை ஆசிய அபிவிருத்தி வங்கி பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்ட கடன் வழங்கும் நிதிப் பொறிமுறையின் கீழ் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், குறித்த கடன் தொகை மற்றும் நன்கொடையைப் பெற்றுக்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் குறித்த ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

06) பிலியந்தலை கஹபொல ரெஜிடெல்வத்த காணியை தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்திற்கு மீண்டும் ஒப்படைத்தல்

மிருகக்காட்சிச்சாலை திணைக்களத்தின் பொறுப்பிலிருந்த பிலியந்தலை கஹபொல ரெஜிடெல்வத்த காணி அன்றிருந்த புத்தசாசன அமைச்சு பொறுப்பேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் ‘லயிட் ஒப் ஏசியா பவுண்டேஷன்’ நிறுவனத்திற்கு ஒப்படைத்து இந்தியாவின் புத்தரின் கபிலவஸ்து சாக்கிய பூமி மீள் நிர்மாண கருத்திட்டத்திற்கு வழங்குவதற்கு 2016 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டம் 2017 ஆண்டு ஆரம்பித்து 2020 ஆண்டு மார்ச் மாதம் பூர்த்தி செய்யப்பட இருந்தாலும், இதுவரை அதன் பெறுபேறு 5% வீதத்திற்கும் குறைவாகக் காணப்படுவதால் ‘லயிட் ஒப் ஏசியா பவுண்டேஷன்’ நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை நீக்குவதற்கும், குறித்த காணியை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சுக்கு மீளப் பெற்றுக்கொள்வதற்கும், குறித்த அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக 05 ஏக்கர் காணியை அமைச்சின் கீழ் வைத்துக்கொண்டு, எஞ்சிய காணித்துண்டை மீண்டும் தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

07) இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் பரீட்சை நடாத்தும் செயன்முறையை நவீனமயப்படுத்தல்

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பிரதானமாக வருடாந்தம் பாடசாலைக் கல்வி தொடர்பான தேசிய பரீட்சைகள் 04 உம் நிறுவன ரீதியான பரீட்சைகள் 325 உம் நடாத்தி வருகின்றது. குறித்த பரீட்சைகளை நடாத்துவதில் அதிக பணிகளை திணைக்களத்தின் பணியாளர்கள் பொதுவான அலுவலக முறைகளைக் கையாண்டு மேற்கொள்ளப்படுவதுடன், பரீட்சைகளின் துல்லியத்தையும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்காக பரீட்சை முறையை டிஜிட்டல் முறைமைப்படுத்தலின் தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, பரீட்சைத் திணைக்களத்தின் முகாமைத்துவ செயன்முறையை நவீனமயப்படுத்துவதற்காக தேவையான இணையத்தள வசதிகள் உள்ளிட்ட நவீன தொழிநுட்ப உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும், குறித்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் குறித்த பயிற்சிகளை பணியாளர் குழாமைப் பயிற்றுவிப்பதற்கும், பரீட்சை மதிப்பீட்டுச் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக மாகாண மட்டத்தில் பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களை நிறுவுவதற்கும் கல்வி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

8) ருமேனியா மற்றும் ஸ்பெயினில் இலங்கை தூதரகங்களை அமைத்தல்

ருமேனியா மற்றும் இலங்கைக்கு இடையில் 1957 ஆம் ஆண்டிலிருந்து இராஜதந்திர உறவுகள் காணப்படுவதுடன், தற்போது இரு நாடுகளுக்குமிடையே ஆரோக்கியமான இருதரப்பு தொடர்புகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கைக்கும் ஸ்பெயினுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் 1955 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையேயான தொடர்புகள் மேலும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் குறித்த இரு நாடுகளிலும் இலங்கைத் தூதரக அலுவலகத்தை அமைப்பதற்காக வெளிநாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

9) பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வனங்களைத் தவிர்ந்த வனப் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் காணப்படும் ஒதுக்கக் காடுகளின் காடுகள் அற்ற காணிகளை ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கான பொறிமுறையை அடையாளங் காணல்

ஒதுக்கக் காடுகள் எனக் கணிப்பிடும் காடுகள் அல்லாத காணிகள் சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக பொருளாதார மேம்பாட்டு அலுவல்களுக்காக பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்காக பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை நீக்கி அமைச்சின் இடைக்காலக் குழுவுக்கு ஒப்படைப்பதற்கு 2006 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. குறித்த தீர்மானத்தால் அக்காணிகளில் தற்காலிகமாக சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ள சிரமங்களைக் குறைப்பதற்காக அவ்வாறான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதில் இலகுவான முறையொன்று அறிமுகம் செய்தல் பொருத்தமானது என 2020 ஆம் ஆண்டு யூலை மாதம் 01 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மரினிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வன விலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் காணி அமைச்சின் உத்தியோகத்தர்கள் விடயங்களை ஆராய்ந்து புதிய முறையொன்ளை தயாரித்துள்ளனர். குறித்த பொறிமுறையை நடைமறைப்படுத்துவதற்காக வன விலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் காணி அமைச்சின் அமைச்சர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

10) மன்னார் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியத்தின் 200 மில்லியன் அமெரிக்க டொல்கள் முதலீட்டில் 100 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை மன்னார் தீவில் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் பௌதீக முன்னேற்றம் 73% வீதமாகவும் உள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் குறித்த நிர்மாண நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கருத்திட்டத்திற்காகப் பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் 47 மில்லியன் எஞ்சியுள்ளதுடன், குறித்த நிதியில் குறித்த மின்னுற்பத்தி நிலையத்தில் மேலும் 06 டர்பயின் காற்று மின்னாலைகளை பொருத்தலாம் எனத் தெரியவந்துள்ளது. அதற்கமைய செயற்படுவதன் மூலம் குறித்த மின்னாலையால் உற்பத்தி செய்யப்படும் மின் கொள்ளவு 20 மெகாவாற்றால் அதிகரிக்க முடியும். கொள்ளவை அதிகரிக்கும் யோசனைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளதுடன், அதற்கமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11) மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் புன்னைக்குடாவில் நிறுவப்படவுள்ள துணி உற்பத்தி தொடர்பான தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட கைத்தொழில் வலயம்

கைத்தொழில் அமைச்சின் விசேட முன்னுரிமையாக முதலீட்டுச் சபை மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து ஒன்றிணைந்த ஏறாவூர் பிரதேசத்தில் ஆடைக் கைத்தொழில் பேட்டையை ஆரம்பிப்பதற்கு அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவில் புன்னைக்குடாவில் முன்மொழியப்பட்ட துணிக் கைத்தொழில் வலயம் ‘துணி உற்பத்தியுடன் தொடர்புபட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு விசேடமான கைத்தொழில் வலயம்’ மூலோபாய அபிவிருத்தித் திட்டமாக அறிவிப்பதற்கும், அதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு உரித்தான 275 ஏக்கர்களை இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்கவும், குறித்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியொதுக்கீடு செய்யவும், குறித்த கைத்தொழில் வலயத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு வழங்குவதற்கும் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்;பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

12) இறயிகம்கோரளை தேசக்தி தேயிலை தொழிற்சாலையை இறயிகம் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கத்திற்கு வழங்கல்

இறயிகம்கோரளை தேசக்தி தேயிலை தொழிற்சாலை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டிருந்த திக்ஹேன சிறு தேயிலைத்தோட்ட அபிவிருத்திச் சங்கம் குறித்த தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை 2019 ஏப்ரல் மாதத்திலிருந்து நிறுத்தியதால், தேயிலைக் கொழுந்துகளை விநியோகிக்கும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறித்த தொழிற்சாலைக்கு தேயிலைக் கொழுந்து விநியோகித்த சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்களுக்கும், தரகுக் கம்பனிகளுக்கும் ஏனைய வெளித்தரப்பினருக்கும் சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்களுக்கு திக்ஹேன சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் 42 மில்லியன் ரூபாய்கள் செலுத்த வேண்டியுள்ளது. குறித்த தேயிலைத் தொழிற்சாலை நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு பிரதேசத்திலுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கையை கருத்தில் கொண்டு, தொழிற்சாலையின் உற்பத்திகளை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்காக நிதிப்பலம் கொண்டதும் 1800 பேர் வரையான அங்கத்தவர்களைக் கொண்டதுமான இறயிகம் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

13) சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்திக்கான கடன் வசதிகளை வழங்குவதற்காக ‘சுயசக்தி கடன் யோசனைத் திட்டத்தை’ திருத்தம் செய்தல்

2017 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் சிறிய கைத்தொழில் அபிவிருத்திப் பிரிவும் ஒன்றிணைந்து 3500 மில்லியன் ரூபாய்கள் முதலிட்டு ‘சுயசக்தி கடன் யோசனைத் திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தக வங்கிகள் ஊடாகக் குறித்த கடன் யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், முன்னேற்றகரமான திட்ட யோசனையை அடிப்படையாகக் கொண்டு வியாபரத்தை ஆரம்பிப்பதற்காக கடன் வழங்கப்பட்டது. இதுவரை குறித்த கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 13,890 தொழில் முயற்சியாளர்களுக்கு 3,064 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் கருத்திட்டத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு 18 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு கீழ்க்காணும் வியாபார நடவடிக்கைகளுக்கமை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு மில்லியன் ரூபாய்கள் அதிகபட்சத்திற்கமைய கடன் வழங்குவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

• தகவல் தொழிநுட்பம் மற்றும் கணணி தொடர்பான திட்டம்
• விவசாய, பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்புத் திட்டம்
• சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டம்
• புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் இயந்திரங்கள் தயாரிப்புத் திட்டம்
• உணவுத் தயாரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட திட்டம்

14) நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய, புனித செபஸ்தியன் தேவாலயத்தல் இடம்பெற்ற உதித்த ஞாயிறு குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 14 பக்தர்களுக்கான வீடமைப்பு

2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய, புனித செபஸ்தியன் தேவாலயத்தின் இடம்பெற்ற உதித்த ஞாயிறு குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடமைத்து வழங்கும் திட்டத்திற்காக 2019 செப்டெம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் 14 இற்காக ஒரு வீட்டை அமைப்பதற்காக 3.24 மில்லியன் ரூபாய்கள் வீதம் 14 வீடுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை பொறியிலாளர் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

15) இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கான கட்டிட நிர்மாணம் (படிமுறை 1) இற்கான ஒப்பந்தம் வழங்கல்

இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கான கட்டிட நிர்மாணம் (படிமுறை 1) இற்கான தேசிய போட்டி முறி பெறுகை பொறிமுறை கையாளப்பட்டுள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தம் 797.81 மில்லியன் ரூபாய்களுக்கு (வற்வரி இன்றி) குருணாகலில் அமைந்துள்ள சதுட பில்டேர்ஸ் கம்பனிக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

16) பயிபசிக் அயிசோபே இன்சுலின் ஊசிமருந்து BP 30/70, 1000 அயியு/மில்லிலீற்றர் 10 வயல்ஸ் 2,000,000 விநியோகத்திற்கான விலைமனுக் கோரல்

நீரிழிவு நோயாளர்களின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் பயிபசிக் அயிசோபே இன்சுலின் ஊசிமருந்துக்கான விலைமனுக் கோரலுக்காக சர்வதேச போட்டி முறிகள் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய BP 30/70, 1000 அயியு/மில்லிலீற்றர் 10 வயல்ஸ் 2,000,000 விநியோகத்திற்கான பெறுகை இந்தியாவின்  M/s Wockhardt Limited இற்கு மொத்தச் செலவு மற்றும் பொதியனுப்பல் செலவு உள்ளிட்ட 3.0 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

17) கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள ச10ழ்நிலையால் தனியார்துறைப் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக உடன்பாடு தெரிவித்த காலப்பகுதியை நீடித்தல்

கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் தனியார்துறைப் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக தொழில் வழங்குனர்கள், தொழிற் சங்கங்கள், தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியால் 2020 மே மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் கீழ்காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடன்பட்டு அதற்கமைய மேற்கொள்ளப்பட்டது.

• கொவிட் 19 தொற்றால் வேலை நிறுத்தப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர்களை தொழிலிலிருந்து நீக்காமல் இருத்தல்

• சமூக இடைவெளியைப் பேண வேண்டியிருப்பதால், நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களையும் பணியில் அமர்த்துவதற்கு இயலாது போவதால் ஊழியர்களை நேரசூசி அடிப்படையில் அல்லது வேறு பொருத்தமான முறைகளைப் பயன்படுத்தி சமமாக பணிபுரியும் வகையில் பணியில் அமர்த்துதல்

• வேலை இல்லாததால் ஊழியர்கள் வீட்டில் தங்கியிருக்க நேரிடுவதால், நிறுவன ஊழியர்களுக்கு இறுதியாக செலுத்தப்பட்ட மாதாந்த மொத்தச் சம்பளத்தின் அடிப்படைச் சம்பளத்தின் 50மூ வீதம் அல்லது ரூபா 14,500 இரண்டிலும் மிகவும் நன்மையான தொகையை செலுத்தல்

• அவ்வாறு செலுத்தும் சம்பளத்திற்காக தொழில் வழங்குனரால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான செலுத்தல்களை மேற்கொள்ளல்
தற்போது கொவிட் 19 தொற்று நாட்டில் பரவி வரும் நிலைமையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை மேற்குறிப்பிட்டவாறு செயற்படவும் குறித்த செயலணி உடன்பாடு தெரிவித்துள்ளதாக தொழில் அமைச்சர் அவர்கள் முன்வைத்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.