தாமதமாகும் பி.சி.ஆர். முடிவுகளால் உண்மையான தொற்றாளர் எண்ணிக்கை வெளிவருவதில் சிக்கல்…

இலங்கையில் கடந்த சில நாட்களாகத் தினந்தோறும் ஒன்பதாயிரம் வரையில் சராசரியாக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அந்தளவு தொகையைக் கையாள முடியாது ஆய்வுகூடங்கள் திணறுவதால் முடிவுகள் வெளிவருவதில் தாமதங்கள் நிலவுகின்றன என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஆய்வுகூடங்களில் ஒரு நாளில் இத்தனை பி.சி.ஆர். பரிசோதனைதான் செய்யமுடியும் என்ற வரையறை இருப்பதால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிகள் வெளிவருவதில் தாமதம் காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவர் வைத்தியர் ரட்ணசிங்கம் தணிகைவாசன் சர்வதேச தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.