ஜனாதிபதி – மைக்பொம்பியோ முக்கிய பேச்சு – அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்று முன்னர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வலுவான இறையாண்மையுள்ள இலங்கையுடன் கூட்டுச் சேர்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே அவரது இந்த விஜயத்தின் நோக்கம் எனவும்,

சுதந்திரமானதும் வௌிப்படையானதுமான இந்திய வலயத்திற்கான பொது நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல அமெரிக்க இராஜாங்க செயலாளர் எதிர்பார்ப்பதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டிருந்தது
குறித்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கும் செல்லவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.