ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் அரசாங்கம் உண்மைத் தன்மையோடு செயற்பட்டுள்ளதா?..

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் அரசாங்கம் உண்மைத் தன்மையோடு செயற்பட்டுள்ளதா?

(பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்)

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் அரசாங்கம் உண்மை தன்மையோடு செயற்பட்டுள்ளதா என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு வழங்கும் விடயத்தில் அரசியல் சாயமின்றி செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மழவராயன் கிராமத்தில் வாழும் மக்கள் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றமை தொடர்பில் இன்றைய தினம் அவ்விடம் நேரடி விஜயம் செய்து அம்மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக இப்பிரதேச மக்கள் யானைகளின் தொல்லைக்குள் வாழ்ந்து வருவது தொடர்பில் மக்களால் சுட்டிக்காட்டிக் காட்டப்பட்டது.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிற்காக வறிய குடுபங்களிலிருந்து கிராம சேவகர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு பிரதேச செயலகங்களில் இராணுவத்தினரின் இறுக்கமான நேர்முக பரீட்சையின் மூலம் பலர் தெரிவாகினர். ஆனால் தற்போது அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பில் இணைக்கப்படாமல் பணம் படைத்தவர்கள் தெரிவாகியிருக்கின்றனர். நாட்டின் தலைவர்கள் இதனை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு வழங்கும் விடயத்தில் அரசியல் சாயமின்றி உண்மைத்தன்மையோடு செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.