கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்…

(க.கிஷாந்தன்)

கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது கொவிட்-19 வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்கள் அடங்கிய சுற்றறிக்கையைக் கடுமையாகப் பின்பற்றுமாறு ஆளுநர் அவர்களினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன் கெப்படிபொல மற்றும் பண்டாரவளை பொருளாதார மையத்தில் முன்னெடுக்கப்படும் வியாபார நடவடிக்கைகள் சுகாதார முறைமைகளைப் பேணி, பாதுகாப்பான பிரதேசமாகத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக, குறித்த மையத்திற்கு சமூகமளிக்கும் அனைத்து வியாபாரிகளின் வாகனங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்குரிய பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார அதிகாரிகளினால் பரிந்துரைக்கப்படுவது கட்டாயமாகும் என உத்தரவிடப்பட்டது. மேலும் குறித்த சட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன டெனிபிடிய, பண்டாரவளை மேயர், ஊவா மாகாண பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், பதுளை மற்றும் மொனராகளை மாவட்டச் செயலாளர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.