கோட்டாவிடம் இரக்க குணம் இல்லை; மக்களைச் சாகடிக்க முயல்கிறது அரசு – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் இன்று சமூகத்துக்குள் ஊடுருவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால், அரசோ நாட்டை முழுமையாக முடக்காமல் மௌனம் காக்கின்றது. இந்தநிலையில், மக்களை அமைதியாகச் சாகடிக்க அரசு முயல்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தற்போது இரக்க குணமே இல்லை என்றும் அவர் சாடினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவுகின்ற நிலையில் அரசு பொறுப்புணர்வில்லாமல் நடந்துகொள்கின்றது.
தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவிடம் காணப்பட்ட இரக்க உணர்ச்சியை தற்போது காணமுடியவில்லை.
அமைச்சர்களும் பிரதிஅமைச்சர்களும் தங்களுக்கு வாக்களித்த மக்களைப் புறக்கணிக்கின்றனர்.
கொவிட் 19 நிதியத்திற்கு உலகவ ங்கி வழங்கிய நிதி குறித்த ஆவணங்கள் எவையும் இல்லை.அரசிடம் தற்போது உரிய திட்டங்கள் எதுவுமில்லை. அது தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டது” – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.