வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன

வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.சந்திரராஜ் தெரிவித்துள்ளார்.

வட இலங்கை சங்கீத சபையினால் நாடாளவிய ரீதியில் எதிர்வரும் 7 ஆம் திகதி மற்றும் 8 ஆம் திகதி சகல மட்டங்களுக்குமான எழுத்துப் பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கொவிட் -19 பரவல் காரணமாக நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகின்றது. பரீட்சைக்குரிய திகதிகள் பின்னர் பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்