வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கரைச்சி பிரதேச சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் கொவிட் 19 நோய் எதிர்ப்புசக்தி குடிநீர் அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது…

வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கரைச்சி பிரதேச சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் கொவிட் 19 நோய் எதிர்ப்புசக்தி குடிநீர் அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபையின் நிதி பங்களிப்புடன் இன்றுமுதல் இடம்பெறவுள்ள குறித்த மருத்துவ நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றம் அவர்களது குடும்பங்கள், சபைக்கு வருகை தந்த பொதுமக்களிற்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய ஆரம்ப நிகழ்வை தொடர்ந்து கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள உருத்திரபுரம், கந்தபுரம், இராமநாதபுரம், முரசுமோட்டை ஆகிய பிரதேசங்களில் உள்ள சுதேச மருத்துவ நிலையங்களில் பொது மக்களிற்கான குறித்த நோய் எதிர்ப்ப சக்தி மருந்துகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஆயுள்வேத மருத்துவ திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பேயால, சுலதாரணி ஆகிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் குறித்த பிரதேசத்தில் உள்ள சுதேச மருத்துவ சிகிச்சை நிலையங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என பிரதேச பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.